செவ்வாய், 12 ஜனவரி, 2010

எக்காலம்?

அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்?

ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?

இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல்
துணை பிரிந்தபோது அருள் தூல்தொடர்ந்து கொள்வது எக்காலம்?

ஈம்என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓம்என்று சொன்னதுவும் உற்றறிவது எக்காலம்?

உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்?

ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்?

எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம்?

ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும்
தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம்?

ஐஞ்சு கரத்தானை அடி இணையைப் போற்றிசெய்துநெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம்?

ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்?

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக