தேடிச்சோறு நிதம் தின்று - பலசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக வுழன்று - பிறர்வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?